பாகுபலி ரேஞ்சில் ரன் ரேட்டிங்? 3ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி யாருக்கு!
- IndiaGlitz, [Friday,August 27 2021] Sports News
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்த் தொடர் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 423 ரன்கள் எடுத்து இந்தியாவைவிட 345 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இதனால் இந்தியா வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிடுமோ என்ற வருத்தம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இப்போதே ஏற்பட்டுவிட்டது.
4 போட்டி கொண்ட டெஸ்ட்தொடர் போட்டியில் இந்தியா 2 ஆவது டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3 ஆவது தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இங்கிலாந்து தற்போது 345 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 165 பந்துகளுக்கு 14 பவுண்டரி உட்பட 121 ரன்கள் எடுத்து ஹாட்ரிட் சதத்துடன் மிரளவிட்டிருக்கிறார். கூடவே இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மிலன் அரைச் சதத்துடன் இந்திய பவுலர்களை திணறடித்தார்.
இங்கிலாந்தின் ரன் ரேட்டிங் உயர்ந்ததற்கு கேப்டன் ஜோ ரூட் மற்றும் டேவிட் மிலேனே காரணமாக இருந்துள்ளனர். ஜோ ரூட் இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தனது 23 ஆவது சதத்தை நிறைவு செய்திருக்கிறார். கூடவே இந்தியாவிற்கு எதிரான தற்போதைய தொடரில் 3 ஆவது சதம் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுடன் 8 ஆவது சதம் எனப் பல்வேறு சாதனைகளை அசலாட்டாக செய்துள்ளார்.
மேலும் அலிஸ்டர் குக் சாதனையான ஒரு காலண்டர் ஆண்டில் எடுத்த அதிக ரன்களையும் எடுத்து சாதனை மேல் சாதனையாக குவித்து வருகிறார். இதனால் இங்கிலாந்து வெற்றிப்பெறுவது உறுதி என்பதுபோன்ற தோரணையுடன் இங்கிலாந்து வீரர்கள் வலம் வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரவுண்டை புரிந்துகொள்ளாமல் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது போன்ற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.