லார்ட்ஸ் மைதானத்தில் 38 வருட சாதனையை முறியடித்த சிராஜ்… கொண்டாடும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு இடையே இந்திய பவுலர் முகமது சிராஜ் 38 வருட கபில்தேவ் சாதனையை முறியடித்துள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுவும் இங்கிலாந்தின் ரன் ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டிருந்த ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுத்தப்பின்பு இங்கிலாந்து அணியை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அதேபோல இரண்டாவது இன்னிங்ஸின்போது ஜாஸ் பட்லர்- மொயின் அலியின் கூட்டணியை உடைத்து மொயின் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியுள்ளார். மொயின் அலி பவுண்டரி, சிக்சர் என படு அசத்தலாக பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது அவருடைய விக்கெட் இந்திய பவுலர்களுக்கு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. அந்தத் தருணத்தில் சிராஜ் பக்கத்தில் வந்த கேப்டன் கோலி, பவுன்சர் பந்துகளாக குத்திப்போடு எனச் சொன்னாராம்.
இந்த வித்தையை உடனே செயல்படுத்திய சிராஜ் மொயின் அலியினை விக்கெட்டை அசலாட்டாக வீழ்த்தினார். அதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து வீரர் சாம் சரணின் விக்கெட்டையும் இதேபாணியில் வீழ்த்தினார். இதனால் ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.
இதற்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது முன்னாள் கேப்டன் கபில்தேவ் அவர்கள் ஒரே டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். அந்த 38 வருட சாதனையை தற்போது முகமது சிராஜ் முறியடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments