கடைசி பந்துக்கு முன்னர் பூம்ராவிடம் விராத் கோஹ்லி கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் முதல் டி-20 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, டி-20 தொடரையும் வெல்ல வேண்டுமானால் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது
நாக்பூரில் நடந்த நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் விராத் மற்றும் ராகுல் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். விராத் கோஹ்லி 21 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்தது. ராகுல் 71 ரன்கள் குவித்தார்.
145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை நெஹ்ரா மற்றும் பூம்ரா அவ்வப்போது கட்டுப்படுத்தி வந்தனர். இருப்பினும் இங்கிலாந்து அணி இறுதியில் வெற்றியை நெருங்கிவிட்டது. கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற வெறும் 8 ரன்களே தேவைப்பட்டது. டி-20 போட்டியில் 6 விக்கெட்டுக்கள் கையில் இருக்கும்போது 8 ரன்கள் எடுப்பது என்பது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் பூம்ராவின் அபாரமான பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றி கனவை தகர்த்துவிட்டது.
ஆம் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய பூம்ரா, கடைசி பந்தை வீசும்போது அதிகம் யோசித்தார். ஏனெனில் அந்த பந்தில் ஒரு சிக்ஸர் அடித்துவிட்டால் இந்தியா தோல்வியை தழுவிவிடும். விராத் கோஹ்லியிடம் அவர் இதுகுறித்து ஆலோசனை கேட்டபோது, 'எந்தவித டென்சனும் இல்லாமல் உங்களால் இயல்பாக எப்படி பந்துவீச முடியுமோ, அவ்வாறே பந்துவீசுங்கள்' என்று கோஹ்லி கொடுத்த நம்பிக்கையான வார்த்தைகளை மனதில் கொண்டு கடைசி பந்தை வீசினார் பூம்ரா. அந்த பந்தை சந்தித்த அலி, ஒரு ரன்னை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கடைசி நேர நம்பிக்கையான ஆட்டம் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த ஆட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தையும் வென்று இந்திய அணி டி-20 தொடரையும் வெல்ல நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments