ஓட்டுநர் இல்லாமல் பறக்கும் கார்… சென்னை நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆசியாவிலேயே முதல் முறையாக சென்னையை சேர்ந்த “வினடா ஏரோமோபிலிட்டி“ என்ற நிறுவனம் ஆளில்லாமல் தானாக இயந்திரம் மூலம் பறக்கக்கூடிய ட்ரோன் வகை காரை கண்டுபிடித்து உள்ளது. கடந்த 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாகவும் வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுக்க இந்தவகை கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் நிறுவனத்தின் தலைவர் யோகேஷ் ராமநாதன் தெரிவித்து உள்ளார்.
சாலை, ரயில், விமானப் போக்குவரத்து எல்லாம் தற்போது மலையேறி விட்டது. எலக்ட்ரிக் வாகனம், தானியங்கி கார் வகைகளும் வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து விட்டன. இதைத்தவிர உலகம் முழுவதும் முழு முயற்சியாக நடைபெற்றுவரும் ஒரு கண்டுபிடிப்பு பறக்கும் கார்கள்.
இதுவரை உலகத்தில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பறக்கும் கார்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சில நாடுகளில் சோதனை ஓட்டமும் நடைபெற்று இருக்கிறது. சமீபத்தில் கூட ஸ்லோவாக்கியாவின் ஸ்டீபன் கிளீன் நிறுவனம் சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் கார் திடீரென 3 வினாடிகளில் பறக்கும் கார்களாக மாறி 1,500 அடி வரை பறக்கும் கார்களை சோதனை செய்துபார்த்தது.
இதுபோன்ற முயற்சிகள் உலகம் முழுக்கவே வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த “வினடா ஏரோமோபிலிட்டி“ நிறுவனத்தின் ஆய்வுக்குழு ஆளில்லாமல் தானாக இயந்திரம் மூலம் இயங்கும் பறக்கக்கூடிய காரை கண்டுபிடித்து உள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தியாவின் தமிழகத்தில் இந்த முயற்சி நடைபெற்று இருப்பதால் பலரும் வரவேற்று உள்ளனர்.
பறக்கும் கார்களின் சிறப்பம்சம்
சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா ட்ரோன் ஹப்பாக மாறும் எனத் தெரிவித்து இருந்தார். அந்த அளவிற்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாகவும் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு மாற்றாகவும் இந்த பறக்கும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சென்னையை சேர்ந்த வினடா ஏரோமோபிலிட்டி நிறுவனம் தற்போது உருவாக்கியுள்ள ட்ரோன் கார்களுக்கு ஓட்டுநர்களே தேவையில்லை. இதைத்தவிர பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த கார்களுக்கு இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது.
கார்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் எங்கு செல்ல வேண்டும் என்ற இடத்தை மட்டும் தேர்வு செய்துவிட்டால் போதுமானது. மேலும் தரையிறங்குவதற்கு மொட்டை மாடியைக் கூடிய பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மிகவும் எளிதான முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் உலகிலேயே முதல் முறையாக 10,000 அடி வரை பறக்கக்கூடிய காரை வினடா நிறுவனம் உருவாக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நேரங்களில் மிக எளிதாக தரையிரங்கும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் பெட்ரோல், டீசல் பயன்பாடு இல்லை. பயோ கேஸை பயன்படுத்தி இந்த கார்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
வினடா நிறுவனம் உருவாக்கிய கார்களில் சென்னை – புதுச்சேரி வரை பயணிக்க வெறும் ½ மணி நேரம் வரை மட்டுமே செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சுற்றுப்புறச் சூழல் மற்றும் டிராபிக் இல்லாத ஒரு நிம்மதியான பயணத்தை இதன்மூலம் அனுபவிக்க முடியும்.
தற்போதுவரை வினடா நிறுவனம் பூனேவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் இந்தக் கார்களுக்கான உற்பத்தி துவங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் யோகேஷ் ராமநாதன் தெரிவித்துள்ளார். சோதனை ஓட்டத்தில் உள்ள இந்தக் கார்கள் வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் கூறப்படுகிறது.
Delighted to have been introduced to the concept model of the soon-to-become Asia’s First Hybrid flying car by the young team of @VAeromobility . 1/2 pic.twitter.com/f4k4fUILLq
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) September 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments