இந்தியாவில் அறிமுகமாகும் 6ஜி சேவை? சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
- IndiaGlitz, [Saturday,October 16 2021]
இந்தியா முழுக்க தற்போது 4ஜி சேவை பரவலாகி இருக்கிறது. ஆனால் இதற்கிடையில் சீனா, தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வணிக ரீதியிலான 5ஜி சேவை கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. ஆனால் இந்தியாவில் 5ஜி சேவையே இன்னும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிது. ஒருவேளை 6ஜி சேவைகள் துவங்கப்பட்டால் 5ஜி தொழில்நுட்பத்தில் கிடைக்கும் வேகத்தைவிட 50 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என்றும் தகவல் கூறப்படுகிறது.
இந்தியாவில் இதற்கான வேலைகள் தற்போது தீவிரம் பெற்றிருப்பதாகவும் விரைவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ஜப்பான், பின்லாந்து, தென்கொரியா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் 6ஜி வேலைகள் துவங்கி இருப்பதாகவும் வரும் 2028-2030 வாக்கில் உலகம் முழுக்க 6ஜி சேவை பரவலாகி விடும் என்றும் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்
தற்போது 5ஜி தொழில்நுட்பத்தில் டேட்டா டவுன்லோடிங் வேகம் 20Gbps (Gigabyte per second) என இருக்கிறது. அதுவே 6ஜி சேவையில் 1000Gbps என டேட்டா டவுன்லோடிங் வேகம் இருக்கும் என்றும் இந்த வேகத்தில் ஒரு திரைப்படத்தை டவுன்லோடு செய்தால் வெறும் 51 நொடிகளில் டவுன்லோடு செய்துவிடலாம் என்றும் தகவல்கள் சொல்லப்படுகின்றன.