திடீர் ஓய்வை அறிவித்த சானியா மிர்சா… என்ன காரணம்?
- IndiaGlitz, [Thursday,January 20 2022] Sports News
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இணைந்து விளையாடிவரும் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திடீர் ஓய்வை அறிவித்துள்ளார். இவர் இரட்டையர் பிரிவில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனையாக இருந்துவரும் நிலையில் திடீர் ஓய்வை அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பல இளைஞர்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறார். ஹைத்ராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா ஃபெடரேஷனுக்காக விளையாடி வருகிறார். மேலும் 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அதோடு சர்வதேச அளவில் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் உலகின் நெம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்கிறார்.
தற்போது 3 வயது குழந்தைக்குத் தாயான சானியா மிர்சா கடின முயற்சிக்குப் பின் உடல்எடையைக் குறைந்து ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே இரட்டையர் பிரிவில் சானியா தோல்வியடைந்தார். இதையடுத்து அனைத்துவிதப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து கருத்து பகிர்ந்த சானியா எனது 3 வயது குழந்தையை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்று ஆபத்தைச் சந்திக்க விரும்பவில்லை. மேலும் தற்போது எனது வேகம் முற்றிலும் குறைந்து போயுள்ளது. இந்தப் போட்டிக்காக எனது உடல் எடையை குறைத்து கடினப்பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. வயதுமுதிர்வு காரணமாக மூடடுவலி இருக்கிறது. ஆனால் இந்த சீசன் முழுக்கத் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்து உள்ளார்.
இரட்டையர் பிரிவில் முதலில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நாடியா கிச்சேனாக்குடன் இணைந்து விளையாடிய சானியா 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் தோற்றுப்போனார். தொடர்ந்து கலப்பு பிரிவில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.