தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து மோடி அரசு எடுத்த மூன்று முக்கிய முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை அடுத்து இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூடி பாதுகாப்பு குறித்த் ஆலோசனை செய்தது.
இந்த ஆலோசனையின் முடிவில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் பாகிஸ்தான் நாட்டுக்கு வழங்கப்பட்ட அதிக ஃபேவரைட் நாடு என்ற வணிக அந்தஸ்தை ரத்து செய்வது.
இரண்டாவதாக இந்த தாக்குதலுக்கு பதிலடி தர ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
மூன்றாவதாக பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதர், அஜய் பிசாரியா உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments