இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விசா இல்லை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,March 12 2020]
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவிட்டது என்பதும் சுமார் 60 இந்தியர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வைரஸ் காரணமாக பெங்களூரை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் நேற்று மரணமடைந்தார் என்பதும் கேரளாவில் 85 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலால் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் மேலும் பரவாமல் இருக்க மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இன்று முதல் மார்ச் ஏப்ரல் 15ஆம் தேதி வரை அனைத்து நாடுகளுக்கும் விசா கிடையாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இருப்பினும் சர்வதேச அமைப்புகள், ஐநா அதிகாரிகள், வேலை நிமித்தம் செல்பவர்களுக்கு மட்டும் விலக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீனா, இத்தாலி, ஈரான்,கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று, பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் நாடு திரும்பிய இந்தியர்கள் மற்றும் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 14 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.