இங்கிலாந்து, இத்தாலியை பின்னுக்கு தள்ளியது இந்தியா: ஒருநாள் பாதிப்பில் 3வது இடம்

கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து மற்றும் இத்தாலி நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா உலக அளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை தினமும் ஆயிரம் இரண்டாயிரம் என்று இருந்த கொரோனா பாதிப்பு தற்போது தினமும் 10 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நேற்று வரை ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இன்று நான்காவது இடத்தில் முன்னேறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி விட்டதே இதற்கு காரணமாகும். மேலும் ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் நாடும் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் இந்தியாவும் கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 20,89,701 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் மேலும் பிரேசில் நாட்டில் 805,649 பேர்களும், ரஷ்யாவில் 502,436 பேர்களும், இந்தியாவில் 298,283 பேர்களும், இங்கிலாந்தில் 291,409 பேர்களும், ஸ்பெயினில் 289,787 பேர்களும், இத்தாலியில் 236,142 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More News

ஹோட்டல் உரிமையாளருக்கு 1446 ஆண்டு சிறை!!! அப்படி என்ன செய்தார் தெரியுமா???

தாய்லாந்து நாட்டில் ஒரு ஹோட்டல் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்து வதற்காக எடுத்த முடிவு தற்போது அவர்களுக்கே பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

இந்த நாட்டில் மட்டும் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழப்பார்கள்- முன்னணி நிபுணர் கூறிய அதிர்ச்சி தகவல்!!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 2 லட்சம் மகக்ள் உயிரிழப்பார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம் சென்னையில்தான் இருக்கிறது!!! எது தெரியுமா???

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சென்னை ஐஐடி நிறுவனம் இடம் பிடித்து இருக்கிறது.

சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்: புதிய செயலாளர் யார்?

தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிகினி போஸ் கொடுத்து தத்துவ மழை பொழிந்த தமிழ் நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த நடிகை சஞ்சனா அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே.