10 மாதங்களில் 1 கோடியைத் தாண்டி… உலகிற்கு இந்தியா கொடுத்த படு ஷாக்!!!

  • IndiaGlitz, [Saturday,December 19 2020]

 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட முதல் பாதிப்பு தற்போது 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதனால் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த எண்ணிக்கையில் முதல் 10 லட்சம் வரைக்கும் மிக மெதுவான வேகத்தில் இருந்த கொரோனா பாதிப்பு அடுத்தடுத்த கட்டத்தில் படு வேகத்தில் அதிகரித்ததுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியாவின் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு 93,795 ஆக பதிவாகியது. அதே நேரத்தில் உயிரிழப்பு 10 லட்சத்திற்கு 104 என்ற அளவிலே இருந்ததால் பலரும் நிம்மதி அடைந்து இருந்தனர்.

ஆனால் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழப்பும் 1 லட்சத்து 45 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு பட்டியலில் உலகிலேயே அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த பாதிப்பு 1 கோடியே 78 லட்சத்தைத் தாண்டிய நிலையில் உயிரிழப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டி இருக்கின்றனர். அடுத்து பிரேசிலின் உயிரிழப்பு 1 லட்சத்து 85 ஆயிரத்தைத் தாண்டியும் மெக்சிகோ 1 லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பைஃசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தொடங்கி இருக்கின்றன. அந்தத் தடுப்பூசியில் சிறு சிறு ஒவ்வாமைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அமெரிக்காவின் மாடெர்னா கொரோனா தடுப்பூசிக்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. உலகிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கும் 10 நாடுகளின் பட்டியலில் அர்ஜென்டைணா மற்றும் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்து உள்ளது.

More News

விவாகரத்து, பிரேக் அப் குறித்து வனிதா மாதிரியே யோசிக்கும் அவரது மகள்!

காதல், திருமணம், விவாகரத்து, பிரேக் அப் என மாறி மாறி வனிதாவின் வாழ்க்கையில் வந்து கொண்டிருக்கும் நிலையில் வனிதாவின் மகள் விவாகரத்து மற்றும் பிரேக் அப் குறித்து பதிவு செய்த இன்ஸ்டாகிராம்

திடீர் திருப்பம்: கைமாறுகிறதா டார்ச்லைட் சின்னம்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் டார்ச்லைட் சின்னம் கேட்டிருந்த நிலையில் டார்ச்லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு

கங்காருவை வீட்டில் வைத்து வளர்க்க முடியுமா? ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புதுத் தகவல்!!!

வீட்டு விலங்குகளாக ஆடு, மாடு, எருமை, நாய், பூனை, கோழி போன்ற விலங்குகளை மட்டுமே வளர்க்கிறோம்.

பிக்பாஸ் டைட்டில் வின்னர் சாயல் தெரிய ஆரம்பித்துவிட்டது: கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 76ஆவது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்று கமல் தோன்றும் நாள் என்பதால் இன்றைய முதல் புரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது 

பிரதமரின் அலுவலகம் விற்பனைக்கா??? OLX இல் வெளியான விளம்பரத்தால் புது சர்ச்சை!!!

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நின்று வெற்றிப் பெற்றதன் மூலம் இந்தியப் பிரதமர் ஆனார்.