10 மாதங்களில் 1 கோடியைத் தாண்டி… உலகிற்கு இந்தியா கொடுத்த படு ஷாக்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா 2 ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் ஏற்பட்ட முதல் பாதிப்பு தற்போது 1 கோடியை தாண்டி இருக்கிறது. இதனால் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த எண்ணிக்கையில் முதல் 10 லட்சம் வரைக்கும் மிக மெதுவான வேகத்தில் இருந்த கொரோனா பாதிப்பு அடுத்தடுத்த கட்டத்தில் படு வேகத்தில் அதிகரித்ததுதான் பலரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியாவின் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு 93,795 ஆக பதிவாகியது. அதே நேரத்தில் உயிரிழப்பு 10 லட்சத்திற்கு 104 என்ற அளவிலே இருந்ததால் பலரும் நிம்மதி அடைந்து இருந்தனர்.
ஆனால் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழப்பும் 1 லட்சத்து 45 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு பட்டியலில் உலகிலேயே அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த பாதிப்பு 1 கோடியே 78 லட்சத்தைத் தாண்டிய நிலையில் உயிரிழப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை எட்டி இருக்கின்றனர். அடுத்து பிரேசிலின் உயிரிழப்பு 1 லட்சத்து 85 ஆயிரத்தைத் தாண்டியும் மெக்சிகோ 1 லட்சத்து 17 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் பைஃசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தொடங்கி இருக்கின்றன. அந்தத் தடுப்பூசியில் சிறு சிறு ஒவ்வாமைகள் இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அமெரிக்காவின் மாடெர்னா கொரோனா தடுப்பூசிக்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது. உலகிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கும் 10 நாடுகளின் பட்டியலில் அர்ஜென்டைணா மற்றும் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்து உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments