2000 ரூபாய் நோட்டு குறித்து ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்
- IndiaGlitz, [Thursday,January 03 2019]
கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்த கரன்ஸிகளில் ஒன்று ரூ.2000.
இந்த நிலையில் 2,000 ரூபாய் நோட்டுக்கள் வரி ஏய்ப்பு, பண மோசடி போன்ற விஷயங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்குக் அதிக புகார்கள் வந்தன. மேலும் ரூ.2000 நோட்டு செல்லாது என்று அரசு எந்த நேரத்திலும் அறிவிக்கும் என எதிர்க்கட்சி தலைவர்களும் பயமுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் 2,000 ரூபாய் தாள்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டின் தேவை குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.