ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 95% உயர்வு
- IndiaGlitz, [Sunday,April 12 2020]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்து பணி செய்பவர்கள் ஒருசிலர் தவிர மற்ற அனைவரும் வீட்டில் சும்மா தான் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளிலும் ஏற்கனவே போட்ட பழைய படத்தையும் பழைய சீரியல்களையும் போட்டு வருவதால் பெரும்பாலான பொதுமக்களுக்கு பொழுது போகவில்லை. இதனை அடுத்து ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இந்த மூன்று வாரத்தில் 95% ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியா மட்டுமின்றி ஸ்பெயின் நாட்டில் 60 சதவீதமும், ரஷ்யாவில் 50 சதவீதமும், ஜெர்மனியில் 25 சதவீதமும், கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இத்தாலியில் 55 சதவீதமும், பிரான்ஸில் 40 சதவீதமும் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் மத்திய அரசால் பல்வேறு ஆபாச தளங்கள் தடைசெய்யப்பட்டு இருப்பினும், ஆபாச படங்களை குறிப்பாக குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தும் 95 சதவீதம் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.