கொரோனா பாதிப்பில் கடந்த 14 நாட்களாக இந்தியாதான் டாப்!!! அதிர்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 55,076 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. இதனால் தொடர்ந்து 14 நாட்களாக இந்தியாவில் அதிகளவு கொரோனா எண்ணிக்கை பதிவாகி இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று ஒரேநாளில் இந்தியாவில் 879 மரணங்களும் நிகழ்ந்து இருக்கின்றன.
தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 27,02,743 ஆக அதிகரித்து இருக்கிறது. குணமடைந்து விடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,97,780 ஆக பதிவாகி இருக்கிறது. மேலும் 6,73,166 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்து இருப்பதகாவும் இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் சேகரிக்கப்படும் கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்த மாதிரிகளில் குறைந்த அளவே கொரோனா உறுதி செய்யப்படுவதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை மகிழ்ச்சி செய்தி கூறியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,99,864 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 3 கோடியே 9 லட்சத்து 41 ஆயிரத்து 264 கொரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த மாதிரிகளில் 6.12% பேருக்கு மட்டுமே கொரோனா உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தற்போது கொஞ்சம் நிம்மதி தரும் தகவலாகப் பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments