பட்டினி வரிசையில்… பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட இந்தியா மோசம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்கும் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர்ஸ் இண்டெக்ஸ் தெரிவித்து உள்ளது. அதிலும் உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையின்படி பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியா படுமோசமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
குழந்தைகளின் வளரும் காலத்தில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை கொடுக்காமல் அதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை விரயமாக்கும் விகிதம் உலகம் முழுவதிலும் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2010-2014 காலக் கட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் விகிதம் 15.1% ஆக இருந்து தற்போது 2015-2019 இல் 17.3% ஆக அதிகரித்து இருக்கிறது.
மேலும் உலகில் உள்ள 107 பட்டினிக் குறியீட்டு நாடுகளில் இந்தியா 94 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்த பட்டியலில் நமது அண்டை நாடான வங்கதேசம் 75 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 88 ஆவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது. பொதுவாக குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக் தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்டகால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும் இந்தியா மோசமாக உள்ளது.
சைல்ட் வேஸ்டிங் என்று அழைக்கப்படும் ஊட்டச்சத்தின்மை விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஆனால் போதிய அளவு கலோரி இல்லாத 14% மக்கள் தொகையில் ஊட்டச்சத்தினால் இறக்கும் குழந்தைகள் விகிதம் இந்தியாவில் 3.7% என மிகக்குறைவாகவே உள்ளது. தெற்கு கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விடவும் மோசமாக டைமூர்-லெஸ்ட், ஆப்கானிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com