பட்டினி வரிசையில்… பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட இந்தியா மோசம்!!!

  • IndiaGlitz, [Saturday,October 17 2020]

 

உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்கும் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர்ஸ் இண்டெக்ஸ் தெரிவித்து உள்ளது. அதிலும் உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையின்படி பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியா படுமோசமாக இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.

குழந்தைகளின் வளரும் காலத்தில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை கொடுக்காமல் அதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை விரயமாக்கும் விகிதம் உலகம் முழுவதிலும் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2010-2014 காலக் கட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் விகிதம் 15.1% ஆக இருந்து தற்போது 2015-2019 இல் 17.3% ஆக அதிகரித்து இருக்கிறது.

மேலும் உலகில் உள்ள 107 பட்டினிக் குறியீட்டு நாடுகளில் இந்தியா 94 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. இந்த பட்டியலில் நமது அண்டை நாடான வங்கதேசம் 75 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 88 ஆவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது. பொதுவாக குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக் தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்டகால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும் இந்தியா மோசமாக உள்ளது.

சைல்ட் வேஸ்டிங் என்று அழைக்கப்படும் ஊட்டச்சத்தின்மை விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஆனால் போதிய அளவு கலோரி இல்லாத 14% மக்கள் தொகையில் ஊட்டச்சத்தினால் இறக்கும் குழந்தைகள் விகிதம் இந்தியாவில் 3.7% என மிகக்குறைவாகவே உள்ளது. தெற்கு கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விடவும் மோசமாக டைமூர்-லெஸ்ட், ஆப்கானிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

More News

என் கதையை திருடிவிட்டார்: கார்த்திக் சுப்புராஜ் மீது பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் என் கதையை திருடி விட்டார் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிறந்த நாளில் கீர்த்திசுரேஷூக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்றும் அவருக்கு தென்னிந்திய திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிக்பாஸ் 12வது நாள்: சுரேஷ் ராக்ஸ், கேமுக்குள் வந்த கேப்ரி, அனிதாவின் ஆத்திரம் தேவையா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சுரேஷ் மிக அபாரமாக விளையாடி மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களின் கவனத்தை திருப்பியுள்ளார் 

அன்பு தங்கச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சூரி!

அன்பு தங்கச்சிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

இந்தியாவில் முதல் முறையாக நீட் தேர்வில் சென்சுரி… 2 மாணவர்கள் கூட்டாக சாதனை!!!

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (நீட் தேர்வு) முதன் முறையாக 720 க்கு 720 மதிப்பெண் பெற்று 2 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.