இந்தியாவுக்கு முதல் தங்கம்: அசத்தினார் நீரஜ் சோப்ரா!
- IndiaGlitz, [Saturday,August 07 2021] Sports News
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளதை அடுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக மதிக்கப்படும் நீரஜ் சோப்ரா ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்தியாவின் தங்க மகன் மீரா சோப்ரா சாதித்தார் என்பது குறிப்பிடதக்கது
ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளதை அடுத்து இந்திய மக்கள் அனைவரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
THE THROW THAT WON #IND A #GOLD MEDAL ??#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion @Neeraj_chopra1 pic.twitter.com/F6xr6yFe8J
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 7, 2021