இந்தியாவுக்கு இதைவிட தலைகுனிவு வேறு எதுவும் வேண்டுமா? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு காலத்தில் இந்தியா என்றாலே பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் நாடு என்றும், பெண்களை தெய்வம் போல் பாதுகாக்கும் நாடு என்றும் பெயர் இருந்தது. ஆனால் இன்று உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதலிடத்தில் இந்தியா உள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தாமஸ் ராய்ட்டர்ஸ் என்ற தொண்டு நிறுவனம் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியல் ஒன்றை ஆய்வு செய்து அதன் முடிவை தற்போது அறிவித்துள்ளது. 193 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகில் பல நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். இந்த நிலையில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது என்பது இந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் பெண்கள், பெண்கள் கடத்தல், பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெண் சிசுக்கொலை ஆகியவவை காரணமாக இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு கடந்த சில வருடங்களாக இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும், சிரியா 3வது இடத்திலும், சோமாலியா 4வது இடத்திலும் சவுதி அரேபியா 5வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் இந்தியா 4வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மேலும் பெண்கள் பாதுகாப்பில் பின்னடைவு ஏற்பட்டு முதலிடத்தில் இருப்பதைவிட வேறு தலைகுனிவு இந்தியாவுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments