2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா 2021 இல் ககன்யான் திட்டத்தின் மூலம் 4 வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. அதற்கு முன்னதாக பெண் வடிவிலான ஒரு ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா திட்ட மிட்டுள்ளது. விண்வெளி வீரர்களுக்கு இந்த பெண் ரோபோ உதவியாக இருக்கும் என்றும் வீரர்களுடன் தோழி போன்று பழகும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இயல்பாக பார்ப்பதற்கு ஒரு பெண் போலவே தோற்றம் கொண்ட இந்த பெண் ரோபோ விற்கு கால்கள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. கால்கள் இல்லாததால் தவழ்ந்து செல்லும் வகையில் இதன் செயல்பாடுகள் உருவாக்கப் பட்டுள்ளன.
பெங்களூரில் விண்வெளி பயணம் குறித்த சாவல்கள் என்ற பொருளில் ஒரு சர்வதேச கண்காட்சி நடைபெற்றது. இதில் “வயோமித்ரா“ என்று பெயரிட்ட பெண் ரோபோ பார்வையாளர்களுக்குக் காட்சி படுத்தப் பட்டது. “வயோமித்ரா” என்றால் சமஸ்கிருதத்தில் சொர்க்க நண்பர் என்று பொருள் சொல்லப் படுகிறது. இரண்டு மொழிகளில் பேசும் திறமை பெற்ற இந்த பெண் ரோபோ ஒரு மாதிரி வடிவம் தான் என்றும் இந்த அமைப்பில் மேலும் மாற்றங்கள் செய்யப் படும் என்றும் இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்தார்.
கண்காட்சியில் ரோபோ எவ்வாறு நகரும் என்பதைக் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் தலைவர் திரு. சிவன் அவர்கள் செய்தியார்களிடம் பேசும்போது, இந்த ரோபோ விண்வெளித் துறையில் இந்தியாவின் சாதனைகளை அதிகப்படுத்தும் என்றார். மேலும் ஆளில்லாத விண்வெளி பயணத்தில் சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு பணிகளுக்கு இந்த வகையிலான ரோபாக்கள் பயன்படுத்தப் படும் என்றார்.
ரோபோவின் பயன்பாடு
ரோபாவில் செய்யப்பட உள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கண்காட்சியில் விளக்கப் பட்டது. அதில் விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் இதில் மென்பொருள்கள் பொருத்தப்படும். “அலெக்சா” போன்று உளவியல் தொடர்பான விஷயங்களில் விண்வெளி வீரர்களுக்கு உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் மனிதர்களின் குரலைக் கேட்டவுடன் அடையாளம் காணவும் தொழில்நுட்பக் கோளாறுகளில் வீரர்களுக்கு உதவும் வகையிலும் இது மேம்படுத்தப் பட உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments