இதெல்லாம் ஒன்னுமே இல்லங்க... இந்தியா நவம்பரில்தான் கொரோனா உச்சத்தைப் பார்க்கும் -ICMR தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து தய்போது இந்தியா அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு முடிவு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ICMR இன் செயல்பாட்டு ஆய்வுக்குழு இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்த ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வில் வரும் நவம்பர் மாதத்தில் இந்தியா கொரோனாவின் உச்சத்தைப் பார்க்கும் எனக் கூறப்பட்டு இருக்கிறது.
முன்னதாக அடுத்த 34 நாட்களில் கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப் பட்டு இருந்த நிலையில் ICMR அடுத்த நவம்பரில் தான் இந்த பாதிப்பு இருக்கும் எனத் தெரிவித்து உள்ளது. இந்தப் புதிய ஆய்வின்படி அடுத்த 74 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிமாக இருக்கும் எனவும் அதுகுறித்து முன்னதாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு 97% இல் இருந்து 67% ஆக குறைந்து இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டி இருக்கிறது.
மேலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் மட்டும் கொரோனா நோய்த்தொற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. அதன் அதிகத் தாக்கத்தை தள்ளிப்போட முடியும். அந்த வகையில் ஊரடங்கினால் நாம் கொரோனாவின் அதிகத் தாக்கத்தை நவம்பருக்கு ஒத்திப் போட்டு இருக்கிறோம். எனவே அதிகத் தாக்கத்தை இந்தியா சந்திப்பதற்கு முன்னால் சுகாதாரக் கட்டமைப்புகள், மருத்துவக் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை அதிகப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்து உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா நடவடிக்கையால் 70 விழுக்காடு நோய் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் சுகாதார கட்டமைப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் கொரோனாவின் உச்சம் இருக்கும் நாட்களில் 27 விழுக்காடு பாதிப்பை தவிர்க்கலாம் எனவும் அந்த ஆய்வு பரிந்துரை செய்திருக்கிறது. ஹான்ஹாப்பின்ஸ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தியாவில் இதுவரை 332,782 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உயிரிழப்புகள் 9,523 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என ICMR வலியுறுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout