இந்தியா ஒரு அற்புதமான நாடு: தனுஷூடன் நடித்த ஹாலிவுட் நடிகர் டுவிட்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

தனுஷூடன் நடித்த ஹாலிவுட் நடிகர் ஒருவர், ‘இந்தியா மிகவும் அற்புதமான நாடு என்றும் இந்தியாவில் ஒரு சிறந்த படத்திற்காக நேரத்தை செலவிட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பதிவு செய்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜகமே தந்திரம்’. இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வரும் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் ஓடிடியில் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒய்நாட் விடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் குறித்து ஜேம்ஸ் காஸ்மோ தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’இந்தியாவில் ஒரு நல்ல படத்திற்காக நான் நேரத்தை செலவு செய்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்தியா ஒரு அற்புதமான நாடு என்றும் இந்தியாவில் நம்பமுடியாத திறமையுடன் பலர் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.