இந்தியா எப்பவும் டாப்புதான் … புகழ்ந்து தள்ளும் இங்கிலாந்து இளவரசர்!!! காரணம் தெரியுமா???
- IndiaGlitz, [Saturday,July 11 2020]
இந்தியாவிடம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்த தெளிவான புரிதல்கள் எப்போதும் இருக்கிறது என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்தியாவின் சார்பாக, “இந்தியா குளோபல் லீக்“ என்ற சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பேசுவதற்காக நேற்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் இந்தியாவைப் பற்றி பல்வேறு கருத்தகளைப் பகிர்ந்து கொண்டதோடு இந்தியாவிற்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் நேரத்தில் உலகத்தை மீட்டு பழையபடி கட்டியெழுப்புவது குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்திய மக்கள் எப்போதும் ஒரு நிலையான வாழ்க்கையை முறையையும் சிந்தனையையும் கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் ஏற்கனவே பேசினேன் என்றும் இளவரசர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், “தன்னை புதுப்பித்துக் கொள்ள முற்படும்போது உலகம், இந்தியாவிடம் இருந்து அபரிகிரகா என்ற (உடைமை கொள்ளாத நற்குணம், பேராசையில்லாத தன்மை) பண்டைய யோக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டது. அதன் தத்துவமும், மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன. அபரிகிரகா யோக கொள்கை, வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தில் அவசியமானவற்றை மட்டுமே வைத்துக்கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது. பண்டைக்கால ஞான உதாரணங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும்” என்றும் தனது கருத்தை இளவரசர் அம்மாநாட்டில் வெளிப்படுத்தி இருந்தார்.
இங்கிலாந்தில் இந்திய புலம் பெயர்ந்தோர் சமூகத்தின் பல உறுப்பினர்களுடன் நான் பல விவாதங்களை நடத்தி இருக்கிறேன். அவற்றில் ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்புக்கான லட்சியத்தால் நான் எப்போதும் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன் என்று தனது நேரடி அனுபவத்தையும் இளவரசர் பகிர்ந்து கொண்டார். இந்திய மக்கள் நிலையான வாழ்க்கை முறையையும் சிந்தனைகளையும் கொண்டிருப்பது குறித்து இங்கிலாந்து இளவரசர் பெருமைபட பேசியிருப்பது தற்போது இந்திய மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.