உக்ரைன்- ரஷ்யா போருக்கு இடையே இந்தியா எடுத்திருக்கும் அதிரடி முடிவு… நடப்பது என்ன?

  • IndiaGlitz, [Sunday,March 20 2022]

25 ஆவது நாளாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் கடுமையான போர் நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்து இருக்கின்றன. அதிலும் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இனிமேல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில்லை எனும் திட்டவட்டமான முடிவில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதைச் செயல்படுத்தி இருப்பது பல உலக நாடுகள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா பொதுவாக 85% கச்சா எண்ணெய் பொருளுக்கு மற்ற நாடுகளையே நம்பியிருக்கிறது. அந்த வகையில் சவுதியிடம் இருந்து 18%, ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து 11%, ஈராக் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிடம் இருந்து 23% என கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. இதில் ஈராக் மற்றும் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் விலை குறைவாகக் கிடைத்துவந்த போதிலும் அமெரிக்கா இவ்விரு நாடுகளின் மீது பொருளாதார தடையை விதித்துவிட்ட காரணத்தால் இந்தியாவும் இந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வந்தது.

ஆனால் முதல் முறையாக அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்து இருந்தாலும் அதையும் மீறி தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா துணிந்துள்ளது. இதனால் இந்தியா ரஷ்யாவிற்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கிறதா? என உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் பொருளாதாரத்தடை கொள்கையை இது மீறுவது ஆகாது என மத்திய அரசு விளக்கம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இரண்டும் இணைந்து ரஷ்யாவிடம் இருந்து கடந்த 15 நாட்களில் 2,03,000 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்திருக்கிறது. மேலும் இதுவரை தவிர்த்துவந்த வெனிசுலா, ஈராக் நாடுகளிடம் இருந்தும் இந்தியா இனிமேல் கச்சா எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்யும் இதனால் இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

More News

எமனே வந்து மரணத்தை கேட்கும்போது நான் என்ன செய்ய முடியும்: ஆண்ட்ரியாவின் 'கா' டிரைலர்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'கா'  என்ற திரைப்படத்தின் டிரைலர் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .

நடிகர் சங்க தேர்தலில் முன்னிலை அணி எது? பரபரப்பு தகவல்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னிலை பெற்ற அணி எது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: 'நச்' பதிலளித்த 'மாஸ்டர்' நடிகை!

தன்னை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர் ஒருவருக்கு 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை 'நச்' என பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபாஸ் உடன் மீண்டும் நடிப்பீர்களா? 'ராதே ஷ்யாம்' தோல்வியை அடுத்து பூஜா ஹெக்டேவின் பதில்!

பூஜா ஹெக்டே நடித்த 'ராதேஷ்யாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் பிரபாஸுடன் மீண்டும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பூஜா ஹெக்டே கூறிய பதில்

 'வாடிவாசல்' படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டாரா வெற்றிமாறன்? வைரல் புகைப்படங்கள்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று 'வாடிவாசல்'