இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!!! பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசு ரூ.51,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை ப்ளூம்பெர்க் செய்தியை சுட்டிக்காட்டி டைம் ஆப் இந்தியா வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கம் கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசு ரூ.51,642 கோடியை ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது டாலர் மதிப்பில் 7 மில்லியன் எனவும் இதன்மூலம் ஒரு நபருக்கு 6-7 டாலர்கள் (ரூ.450-500) வரை செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டவுடன் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு ஊசி மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆகும் செலவு 2 டாலர் (ரூ.150) என்று மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர தடுப்பூசி சேமித்தல் மற்றும் நாடு முழுவதும் அதன் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு செலவுகளாக தனிநபருக்கு 2 டாலர்கள் முதல் 3 டாலர்களை வரை (ரூ.150-225) வரை ஒதுக்கப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது. இதுவரை கொரோனா தடுப்புக்காக வழங்கப்பட்ட பணம் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அது சென்ற நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி என்பதால் நடப்பு இந்த இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தால் புதிய நிதி பற்றாக்குறை எதுவும் இருக்காது எனவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.
தேசிய நிபுணர் குழு அறிக்கையின்படி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுகாதாரத்துறை, பொதுத்துறை, மருந்துத்துறை, உணவு பதப்படுத்தும் தொழில், வேளாண் வணிகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் அரசாங்கம் தொடர்பில் உள்ளது. அதன் முதற்கட்டமாக அதிக ஆபத்துள்ள மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் காவல் துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர் போன்றவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா போர்வீரர்கள் உட்பட சுமார் 30 கோடி முன்னுரிமை பயனாளிகளை இந்தியா அடையாளம் காணத் தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நேற்று காலை பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதையொட்டி மத்தியப் பிரதேச மாநில அரசும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com