சீனா இனி தேவையில்லை: கொரோனா பரிசோதனை கருவிகளை கண்டுபிடித்தது கேரளா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய உதவும் ரேபிட்கிட் என்ற கருவிகளை சீனாவில் இருந்துதான் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது என்பதும், சமீபத்தில் கூட தமிழகம், சீனாவிலிருந்து 24 ஆயிரம் ரேபிட் கிட் கருவிகளை இறக்குமதி செய்தது என்பதும், இந்த கருவிகள் நேற்று சென்னைக்கு வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் இனிமேல் கொரோனா பரிசோதனை செய்யும் கருவிக்கு சீனாவை நாடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள Sree Chitra Tirunal Institute for Medical Sciences & Tech என்ற அமைப்பு தற்போது மிக குறைந்த விலையில் கொரோனா வைரஸை பரிசோதனை செய்யும் கருவியை கண்டுபிடித்து உள்ளது 

Chitra GeneLAMP-N என்ற இந்த கருவியின் மூலம் பத்தே நிமிடத்தில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்து முடித்து விடலாம் என்பதும், இரண்டு மணி நேரத்தில் பரிசோதனையின் ரிசல்ட் கிடைத்துவிடும் என்பதும் இந்த ரிசல்ட் 100% துல்லியமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த கருவி மூலம் இனி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை விரைவாக நடத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது