இனி மத்தது எல்லாம் ஓரமாதா நிக்கனும்… கெத்துக் காட்டும் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம்!!!
- IndiaGlitz, [Saturday,October 03 2020]
பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர் மட்டும் பயணம் செய்யும் வகையில் புதிய ரக விமானங்களை இந்தியா அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறது. அப்படி இறக்குமதி செய்யப்பட்ட விமானங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பார்த்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுவரை இந்தியாவில் விவிஐபிக்களின் பயணத்திற்காக ஏர் இண்டியா போயிங் 747 (B747) ரக விமானம் பயன்படுத்தப் பட்டது. இந்த விமானத்தை ஏர் இந்தியா விமானிகளே இயக்கி வந்தனர். அதோடு பராமரிப்பு வேலைகளையும் All india engineering service lit (AIESL) செய்து வந்தது. தற்போது விவிஐபிக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட போயிங் 777 (B777) விமானங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் ஒரு விமானம் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து நேற்று மதியம் தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்களில் அதிநவீனத் தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் மேலும் விவிஐபிக்களின் பாதுகாப்புக்காக தனிப்பட்ட அம்சங்கள் அதில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த விமானத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்ற வகையில் இடவசதி, மருத்துவ வசதியும் அமைக்கப் பட்டுள்ளதாம். மேலும் மற்ற விமானங்களைப் போன்று எரிபொருளுக்காகத் தரையிறங்க வேண்டிய அவசியமும் இதில் இல்லையாம்.
போர் விமானங்களைப் போன்றே புதிய B777 விமானங்களுக்கு வானத்தில் பறந்த படியே எரிபொருளை ஏற்றிக் கொள்ள முடியும். மேலும் இந்தப் புதிய விமானங்கள் ஏர் இந்தியா விமானிகளால் இயக்கப்படாது என்றும் இந்தியக் கப்பல் படை விமானிகள் அதை இயக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த விமானங்களில் சுய பாதுகாப்பு அறைகள் (SPS- Self protection suites) மற்றும் (LAIRCM- Large Aircraft infrared Countermeasures) ஏவுகளை பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.