இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள்: பதக்க மழையில் இந்திய வீரர்கள்!

ஜப்பானில் நடைபெற்றுவரும் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்க மழை பொழிந்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் கிடைத்துள்ள நிலையில் சற்று முன்னர் மூன்று பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ள தகவல் கிடைத்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும் சுந்தர்சிங் குர்ஜார் என்பவர் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரே பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

அதே போல் இந்தியாவைச் சேர்ந்த வட்டு எறிதல் வீரர் யோகேஷ் கதுன்யா என்பவர் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவர் 44.38 மீட்டர் தூரம் வட்டு எறிந்ததையடுத்து அவருக்கு இந்த பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரே நாளில் ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்திய வீரர்கள் வீராங்கனைகள் குவித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு மொத்தம் 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.