ஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி
- IndiaGlitz, [Tuesday,July 07 2020]
கடந்த சில வாரங்களுக்கு முன் உலகில் அதிகம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்திற்கும் கீழே இருந்த இந்தியா, சமீபத்தில் 4வது இடத்திற்கு முன்னேறியது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா இருந்த நிலையில் திடீரென நேற்று ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் 3வது இடத்தை பிடித்த இந்தியா, ஒரே நாளில் உலக கொரோனா ஒருநாள் பாதிப்பில் இன்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 49,458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 21,486 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒருநாள் கொரோனா பாதிப்பில் மட்டுமின்றி ஒருநாள் கொரோனா பலி எண்ணிக்கையிலும் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பிரேசிலில் 656 பேர்களும், இந்தியாவில் ஒரே நாளில் 474 பேர் பேர்களும், அமெரிக்காவில் ஒரே நாளில் 360 பேர் பேர்களும் மரணம் அடைந்துள்ளதால் பிரேசிலை அடுத்து இந்தியா, பலி எண்ணிக்கையிலும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்