காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. அதேபோல் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் 235.1 புள்ளிகள் பெற்று, இந்தியாவின் ஜிது ராய் தங்கப் பதக்கம் வென்றார். இதனையடுத்து இந்தியாவுக்கு மொத்தம் 8 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆடவர் பளுதூக்குதல் 105 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பிரதீப் சிங்கிற்கு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா 8 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்களம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது, 8வது தங்கப்பதக்கம் காரணமாக இன்றைய மெடல் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 85 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 48 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ் நடிகரின் மகன்

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் பிரபல தமிழ் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.

இராண்டாண்டுகள் கழித்தும் அதே ஃபார்முலா:

பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பொங்கல் ரிலீஸிற்கு கொஞ்சமும் சளைக்காமல் சென்னை அணியின் ரிட்டர்ன் அமைந்தது என்றால் அது மிகையாகாது. 

கமல் எனக்கு எதிரி கிடையாது: ரஜினிகாந்த் பேட்டி

ஆன்மீக அரசியல் செய்தால் ரஜினியை எதிர்ப்பேன் என்று கமல்ஹாசன் கூறியது குறித்து ரஜினியிடம் கேட்டபோது, 'நான் கமலை எதிர்க்க மாட்டேன். அவர் என் எதிரி கிடையாது' என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அறவழி போராட்டத்தில் கமல்-ரஜினி: களைகட்டியது வள்ளுவர் கோட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடிகர் சங்கம் உள்பட மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் அறவழி போராட்டம் காலை 9 மணி முதல் நடந்து வருகிறது.

விபிஎஃப் கட்டணம் திடீர் குறைப்பு: முடிவுக்கு வருகிறதா வேலைநிறுத்தம்

டிஜிட்டல் நிறுவனங்கள் விபிஎஃப் கட்டணத்தை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்