காமன்வெல்த் போட்டி: 2வது தங்கமங்கைக்கு சேவாக் வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கிய காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் மீராபாய் முதல் தங்கத்தையும், குருராஜா முதல் வெள்ளி பதக்கத்தையும் பெற்று தந்த நிலையில் இன்று இந்தியாவுக்க்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற பளு தூக்குதல் 53 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட சஞ்சிதா சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சஞ்சிதாபானு, மொத்தம் 198 கிலோ தூக்கி தங்கம் வென்றார். பாபுநியூகினியாவின் லோ டிகா டோவா வெள்ளிப்பதக்கத்தையும், நியூசிலாந்து நாட்டின் ரிச்செல் லெப்லாங்க் வெணகலப்பத்தக்கத்தையும்   வென்றனர்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் பெற்று கொடுத்த தங்க மங்கை சஞ்சிதாபானுவுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் தனது சமூக வலைத்தளத்தில் இரண்டாவது தங்கம் பெற்று தந்த சஞ்சிதா சானு அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும், அவரது சாதனையால் பெருமை அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.