இந்த வீர மங்கையையும் கொஞ்சம் வைரலாக்குவோமே!

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

மலையாள நடிகை ப்ரியாவாரியர் நடித்த ;'ஒரு ஆடார் லவ்' படத்தின் டீசரில் நிகழ்த்திய புருவ நடனம் மற்றும் கண்ணசைவு இந்தியா முழுவதும் வைரலாகும் அளவுக்கு ஒரு பெரிய விஷயமாக இணையதளங்களில் அலசப்பட்டது. இந்த நிலையில் சத்தமே இல்லாமல் பெண் இனத்தையே பெருமையடையும் வகையில் வீரமங்கை ஒருவர் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார். அவர்தான் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அவனி சதுர்வேதி.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 'மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தை தனியாக இயக்கி, அவனி சதுர்வேதி என்ற பெண் விமானி சாதனை படைத்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு விமானம் ஓட்டுவதில் அடிப்படை பயிற்சி முடித்த அவனி, போர் விமானங்கள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டார். .
அவனி சதுர்வேதி உள்பட 3 பெண் விமானிகள் இந்த பயிற்சியை முடித்து தனியாக போர் விமானத்தில் பறக்கும் பயிற்சியை முடித்துவிட்டாலும் முதன்முதலில் போர் விமானத்தை தனியாக இயக்கும் வாய்ப்பை பெற்று கடந்த் திங்கள்கிழமை சுமார் 30 நிமிடங்கள் தனியாகப் பயணம் செய்து சாதனை படைத்தார்.

இவரது சாதனைக்கு விமானப் படைத் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா, மத்தியப் பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். பெண்களால் எதையும் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் சாதனை செய்த இந்த அவனி சதுர்வேதி அவர்களையும் இணையதளங்களில் கொஞ்சம் வைரலாக்குங்கள் இளைஞர்களே

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்: மேலும் சில தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா மற்றும் 2.0 ஆகிய படங்களை நடித்து முடித்துள்ளார். இதில் 'காலா;' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தெதி ரிலீஸ் ஆகவுள்ளது.

தல அஜித்தின் 'விசுவாசம்' படப்பிடிப்பு எப்போது? வெளிவராத தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை

கஸ்தூரியின் 'மய்யம்' சந்தேகத்தை கமல் தீர்ப்பாரா?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயரில் தொடங்கினார்.

பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்றுதான்: கமல் அரசியல் குறித்து ரஜினிகாந்த்

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நெல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கமலிடம் மேட்டர் பற்றி கேட்ட பா ஜ க பிரமுகர்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் மதுரையில் தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.