கேப்டன்ஷியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி… ரசிகர்கள் மகிழ்ச்சி!
- IndiaGlitz, [Tuesday,February 16 2021] Sports News
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார். முன்னதாக 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று முன்னிலையில் இருந்த முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை இவர் சமன் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு இவரது கேப்டன்ஷியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ஆவது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறது. இதுவும் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பென் போக்ஸ் அவுட்டானார். இந்த விக்கெட்டே இந்திய கிரிக்கெட் அணியின் 1,000 ஆவது டெஸ்ட் விக்கெட்டாகும். இந்தச் சாதனைக்கும் சொந்தக்காரராக கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு சுருண்டது. அடுத்த இன்னிங்ஸில் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தற்போது இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் கேப்டன் விராட் கோலியை பாராட்டி வருகின்றனர்.