கேப்டன்ஷியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி… ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார். முன்னதாக 21 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று முன்னிலையில் இருந்த முன்னாள் கேப்டன் டோனியின் சாதனையை இவர் சமன் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு இவரது கேப்டன்ஷியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 1,000 ஆவது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறது. இதுவும் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பென் போக்ஸ் அவுட்டானார். இந்த விக்கெட்டே இந்திய கிரிக்கெட் அணியின் 1,000 ஆவது டெஸ்ட் விக்கெட்டாகும். இந்தச் சாதனைக்கும் சொந்தக்காரராக கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு சுருண்டது. அடுத்த இன்னிங்ஸில் அக்சர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தற்போது இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் கேப்டன் விராட் கோலியை பாராட்டி வருகின்றனர்.

More News

சொந்த மண்ணில் ஹீரோவாக இருப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? உருகும் முன்னணி கிரிக்கெட் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய வீரர் அஸ்வின்தான் ஹீரோவாக செயல்பட்டார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்… இளம்பெண் சமூக செயற்பாட்டாளர் கைது!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுமாறு டெல்லியில் விவசாயிகள் கடந்த 82 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குட்டி உணவகத்துக்கு கணவருடன் விசிட் அடித்த பிரபல நடிகை… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த அக்டோபரில் தொழில் அதிபர் கவுதம் கிச்லுவை கரம் பிடித்தார்.

'மாஸ்டர்' பாணியில் அஸ்வினுக்கு போஸ்டர்: டெல்லி கேபிடல்ஸ் அணி கலக்கல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

அஜித் அறிக்கைக்கு போஸ்டர் அடித்து ரியாக்சன் செய்த ரசிகர்கள்!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு பிரதமர் முதல் முதல்வர் வரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததால்