பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்!
- IndiaGlitz, [Tuesday,January 19 2021] Sports News
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
கடந்த 15ஆம் தேதி தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா 336 ரன்கள் எடுத்து 33 ரன்கள் பின்தங்கி இருந்தது
இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 328 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் மிக அபாரமாக விளையாடி 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிஷப் பண்ட் கடைசிவரை அவுட் ஆகாமல் அபாரமாக விளையாடி 89 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதும் இவர் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் மற்றொரு பேட்ஸ்மேனான கில் 91 ரன்கள் எடுத்தார் என்பதும் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் அறிமுகமான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது தமிழர்களுக்கும் பெருமை என்பது குறிப்பிடத்தக்கது