உடனே வெளியேறி விடுங்கள்… எச்சரிக்கும் மத்திய அரசு! என்ன நடக்கிறது ஆப்கனில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அந்நாட்டு இராணுவத்திற்கும் இடையே கடுமையான போர்ச்சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
மேலும் ஆப்கனில் தங்கியுள்ள பத்திரிக்கையாளர்கள் தங்களது இருப்பிடத்தை வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவித்து விட்டு இந்தியாவிற்கு வருமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கனில் உள்ள தாலிபான்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு அடிப்படை காரணம் அமெரிக்கப்படை அந்த நாட்டை விட்டு சமீபத்தில் வெளியேறியதுதான் எனவும் கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் வாக்கு அடிப்படையிலான தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு மத அடிப்படைவாத தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தனர். பின்னர் இவர்கள் பயங்கரவாதச் செயலுக்கு துணைபோய் உலகநாடுகளுக்கு அச்சுறுத்தலை விளைவித்து வந்தனர். அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரத்தை தாலிபான்கள் தகர்த்த செயல் உலக நாடுகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது.
இதனால் தாலிபான்களைக் கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க இராணுவம் ஆப்கானில் குவிக்கப்பட்டது. இந்தப்படை கடந்த 20 வருடத்திற்கு மேலாக தாலிபான்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி வந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படை விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதனால் மீண்டும் தலையெடுத்து இருக்கும் தாலிபான்கள் அந்நாட்டில் உள்ள 8 மாகாணங்களின் தலைநகரைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் சிறுபான்மையினர் மீதான தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் புலிஷ்டர் விருது பெற்றவருமான டேனிஷ் சித்திகி என்பவரை தாலிபான்கள் வெறித்தனமாகக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆப்கனில் குடியிருக்கும் இந்தியர்கள் அந்நாட்டில் விமானச்சேவை இருக்கும்போதே அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆப்கனில் தற்போதுவரை 1,500 இந்தியர்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களைத் தவிர பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஆகியோரையும் மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com