நேற்றிரவு 9 மணியின் சாட்டிலைட் புகைப்படம்: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற கூறினார் என்பதும் இந்த நிகழ்வை கோடிக்கணக்கான இந்தியர்கள் நிகழ்த்தி நாட்டின் ஒற்றுமையை நிரூபித்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அவ்வப்போது தட்பவெப்ப நிலை, மழை குறித்த தகவல்களை அளிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் நேற்றிரவு இந்தியாவின் சாட்டிலைட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இணையதளம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அந்த இணையதளத்தில் நேற்றிரவு 9 மணியை செட் செய்து வைத்தால் இந்தியா முழுவதும் விளக்குகள் ஒளிரும் காட்சியின் புகைப்படம் தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் மேகங்கள் சூழ்ந்திருந்த காரணத்தினால் தமிழகம் உள்பட தென்னிந்தியா மட்டும் மின்விளக்குகள் விளக்குகளால் ஜொலிப்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற அனைத்து பகுதிகளிலும் ஒளியால் மிளிர்ந்த இந்தியா தெளிவாக அந்த புகைப்படத்தில் தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Atlast from the provider of the image itself.?????? https://t.co/NC8yNsKDBl
— TamilNadu Weatherman (@praddy06) April 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com