இந்துஜாவின் இந்த பதிவு பூர்ணிமாவுக்கா? என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,November 30 2023]

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு ’பார்க்கிங்’ படத்தின் புரமோஷனுக்காக சென்று வந்த நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் ’சரியானதை செய்யும் நேரம் எல்லாமே சரியானது தான்’ என்று பதிவு செய்துள்ளார். இது அவர் மறைமுகமாக பூர்ணிமாவுக்கு சொன்னது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த ’பார்க்கிங்’ படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்கு இந்துஜா, தனது கல்லூரி கால தோழியான பூர்ணிமாவை அவர் கண்டு கொள்ளவே இல்லை. பூர்ணிமாவே வலிய வந்து பேசியபோது கூட அவர் ஒருசில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு மற்ற போட்டியாளர்களுடன் பேசினார்.

இதனால் பூர்ணிமா மிகவும் வருத்தம் அடைந்தார். தனது நெருங்கிய தோழியே இப்படி தன்னை ஒதுக்குகிறார் என்றால் ஏதோ நடந்திருக்கு என்று விஷ்ணுவிடம் அவர் கூறியிருந்தார். தன்னை பற்றி வெளியே நெகட்டிவ் ஆக பேசிக் கொண்டிருப்பதால் தான் தன்னை இந்துஜா ஒதுக்குகிறாரோ என்றும் அவர் சந்தேகப்பட்டார்.

இந்த நிலையில் இந்துஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ’சரியானதை செய்யும் நேரம் எல்லாமே சரியானது தான்..! என்று கூறி இருப்பது பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்ததை தான் மறைமுகமாக கூறி இருக்கின்றாரா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூர்ணிமாவுக்கு நெகட்டிவிட்டி அதிகமாக இருப்பதால் தான் அவரை அவரது நெருங்கிய தோழியே தவிர்த்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்,.