ஒரே மாதத்தில் கணவருடன் விவாகரத்தா? நொந்து நூலான இந்திரஜா ரோபோ சங்கர்..!

  • IndiaGlitz, [Tuesday,April 30 2024]

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் ஆகி ஒரே மாதம் மட்டுமே ஆகி உள்ள நிலையில் அதற்குள் விவாகரத்து என சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி விடுவதை அடுத்து இந்திரஜாவும் அவரது குடும்பத்தினரும் நொந்து நூலாகி இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகரின் ரோபோ சொந்தவரின் மகள் இந்திரஜா தனது தாய் மாமன் கார்த்திக் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமணம் செய்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி போன்ற பெரிய நடிகைகளே மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்தி கொண்டிருக்கும் நிலையில் ஒரு காமெடி நடிகை ஆடம்பரமாக திருமணம் நடத்தியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதுமட்டுமின்றி திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட குடும்ப நிகழ்வு என்பதை மறந்து திருமண காட்சிகளை வியாபாரம் செய்வது என்பது சீப்பான அணுகுமுறை என நெட்டிசன்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின் இந்திரஜா தனது தந்தைக்கு லிப் கிஸ் முத்தம் கொடுத்தது, இந்திரஜாவின் அம்மா மருமகனுக்கு முத்தம் கொடுத்தது ஆகிய புகைப்படங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திரஜாவுக்கு திருமணம் ஆகி ஒரே மாதமே ஆகி உள்ள நிலையில் அதற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு, விவாகரத்து போன்ற செய்திகளை சமூக வலைதளங்களிலும் யூடியூப் சேனல்களிலும் ஒரு சிலர் வதந்தியாக பரப்பி வருகின்றனர். இது போன்ற செய்திகள் உண்மையில் எங்கள் குடும்பத்தை மனரீதியாக மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது என்று இந்திரஜா மிகவும் நொந்து போய் தெரிவித்துள்ளார்.