விருந்துக்கு சென்ற இடத்தில் இந்திரஜாவுக்கு முத்தம் கொடுத்த நடிகையின் கணவர்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் ஜோடியாக சமீபத்தில் விருந்துக்கு சென்றதாகவும் அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் கார்த்திக் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் பிரமாண்டமாக நடந்தது என்பதும் திருமணத்திற்கு பின்னர் தற்போது ஜோடியாக கார்த்திக் மற்றும் இந்திரஜா ஆகிய இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுஜா வர்ணி மற்றும் அவரது கணவர் சிவா ஆகிய இருவரும், கார்த்திக் - இந்திரஜா தம்பதிகளை விருந்துக்கு அழைத்துள்ளனர். இந்த விருந்துக்கு இந்திரஜா மற்றும் கார்த்திக் சென்ற நிலையில் அங்கு அவர்களுக்கு தடபுடலாக இரவு விருந்து நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருந்து குறித்த இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நேற்று சிவா அண்ணா மற்றும் சுஜி அக்கா வீட்டிற்கு சென்றோம். இரவு டின்னர் சூப்பராக இருந்தது. அதேபோல் அவர்கள் இருவருடைய அன்பு மற்றும் மகிழ்ச்சியை பார்த்து எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. எனக்கு ஒரு நல்ல அண்ணன் மட்டும் அக்கா கிடைத்து விட்டார்கள். அதைவிட அவர்கள் அளித்த உணவு மிகவும் டேஸ்ட்டாக இருந்தது.

அன்றைய நாள் மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றது. அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகள். கடைசியில் நாங்கள் எங்களுக்கான மனுசங்களை சம்பாதித்து விட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த விருந்தில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் அவர் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்தில் சிவா மற்றும் சுஜா வருணி ஆகிய இருவரும் சேர்ந்து இந்திரஜாவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் அதில் உள்ளது.