close
Choose your channels

'இந்திரா' தொடரில் நடிக்கும் பிரபல நடிகைக்கு திருமணம்.. மணக்கோல புகைப்படங்கள் வைரல்..!

Sunday, September 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’இந்திரா’ என்ற சீரியலில் நடித்த நடிகைக்கு திருமணமானதை அடுத்து மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சன் டிவி, விஜய் டிவியை அடுத்து ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’இந்திரா’

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த தொடர் 500 எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகிய நிலையில் சமீபத்தில் இந்த தொடர் முடிவு பெற்றது. இந்திரா - காவியா என்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளையும் மையப்படுத்திய கதையம்சம் கொண்ட இந்த தொடர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த தொடரில் ஃபெளசில் ஹிதயாத் நாயகியாகவும், அக்சய் கமல் நாயகனாகவும் நடித்திருந்த நிலையில் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை மேனகா பிரியா. இவருக்கும் விஷ்ணு விக்னேஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் குறித்த புகைப்படங்களை மேனகா பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளதை அடுத்து புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment