திருமணமான 3 மாதத்தில் நல்ல செய்தி சொன்ன இந்திராஜா ரோபோ சங்கர்.. குவியும் வாழ்த்துக்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணமான நிலையில் திருமணம் ஆகி 3 மாதங்களில் நல்ல செய்தி சொன்னதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது உறவினர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் மார்ச் 24 ஆம் தேதி இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் கோலிவுட்டே திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்த திருமணத்தில் பல ஆடம்பர நிகழ்வுகள் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திருமணம் குறித்து சில சர்ச்சைகளும் எழுந்து இணையத்தில் அவை வைரலானது என்பது பலர் அறிந்ததே.
இந்த நிலையில் திருமணம் ஆகி 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திரஜா மற்றும் அவரது கணவர் கார்த்திக் ஆகிய இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ முதல் சீசன் ஆரம்பமான நிலையில் 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நான்கு சீசன்கள் நடந்தது. கடந்த ஆண்டு ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சி நடக்காத நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஜூன் 29 முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் ஜோடியாக இந்திரஜா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகழ் மற்றும் அவரது மனைவி பென்சி உள்பட சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout