பூர்ணிமாவிடம் சரியாக பேசாதது ஏன்? இந்துஜா கூறிய காரணம்..!

  • IndiaGlitz, [Monday,December 11 2023]

நடிகை இந்துஜா சமீபத்தில் ’பார்க்கிங்’ பட ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது தனது கல்லூரி தோழியான பூர்ணிமாவிடம் சரியாக பேசவில்லை. இது குறித்து பூர்ணிமாவும் மாயாவிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்

இந்த நிலையில் நடிகை இந்துஜா, பூர்ணிமாவிடம் ஏன் சரியாக பேசவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக தான் நாங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றோம். அப்போது பிக் பாஸ் நிர்வாகம் எங்களுக்கு சில விதிமுறைகளை கூறியிருந்தனர்

உள்ளே யாரும் யாருக்கும் ஃபேவரைட் ஆக பேச வேண்டாம் என்று சொல்லித்தான் உள்ளே அனுப்பினார்கள். பூர்ணிமா எனது கல்லூரி தோழியாக இருந்தாலும் இந்த நிபந்தனையால் தான் நான் அவரிடம் அளவோடு பேசினேன்.

பூர்ணிமா நல்ல பெண், நன்றாகத்தான் விளையாடி வருகிறார், சில விஷயங்களை மட்டும் அவர் மாற்றிக் கொண்டால் கண்டிப்பாக அவர் பெரிய அளவில் வருவார்’ என்று இந்துஜா கூறினார்.