தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!
- IndiaGlitz, [Tuesday,November 09 2021]
வங்கக்கடலில் இன்றைய தினம் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாவதால் தமிழகத்தில் அதிக கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையடுத்து தமிழகத்திற்கு நாளையும் நாளை மறுநாளும் பெரும்பாலான மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கைக்கான “ரெட் அலர்ட்“ விடுக்கப்பட்டு இருக்கிறது.
வங்கக்கடல் பகுதியில் இன்று உருவாகும் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று நாளை மற்றும் நாளை மறுதினம் சில இடங்களில் கனமானது முதல் அதிகனமழையாக பொழியும் எனவும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பொழியக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இதையடுத்து அதிகனழை பொழியும் இடங்களுக்கு “ரெட் அலர்ட்“ மற்றும் கனமழை பொழியக்கூடிய இடங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்“ விடுக்கப்பட்டு இருக்கிறது.
நாளை (10.11.2021) கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான “ரெட் அலர்ட்“ விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல புதுச்சேரி மாநிலத்திற்கும் “ரெட் அலர்ட்“ எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு “ஆரஞ்சு அலர்ட்“ விடுக்கப்பட்டு இருக்கிறது.
நாளை மறுதினம் (11.11.2021) கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு “ரெட் அலர்ட்“ செய்யப்பட்டு இருக்கிறது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு “ஆரஞ்சு அலர்ட்“ விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் ரெட் மற்றம் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் 20செ.மீ முதல் 25 செ.மீ வரையில் மழை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.