லவ் பண்ணுங்க, ஆனா பேபி வேணாம்: பிரபல பாடகரின் மகள் கிண்டல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் முதல் முறையாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸை தடுக்கும் மாஸ்குகள் மற்றும் சானிடைசர்களை விட கருத்தடை மாத்திரைகளும் ஆணுறைகளும் அதிகம் விற்பனை ஆவதாக சமீபத்தில் மெடிக்கல் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து டாக்டரும் பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மகளுமான பல்லவி அகர்வால் தனது சமூகத்தில் தெரிவித்தபோது ’வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், ஒருவரை ஒருவர் காதல் செய்யுங்கள், ஆனால் இப்போதைக்கு பேபீஸ் வேண்டாம். அதிகமான கர்ப்ப கேஸ்கள் வருகின்றன என்று கூறியதோடு, ‘என்னடா பண்றீங்க’ என்று கிண்டலுடன் குறிப்பிட்டார். பல்லவியின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.