தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கை!!! காரணம் இதுதான்...
- IndiaGlitz, [Monday,May 04 2020]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. இதற்கு பரிசோதனை செய்யப்படும் அளவு அதிகரித்து இருப்பதே காரணம் என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்து இருக்கிறது.
தமிழத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 266 ஆக உயர்ந்து காணப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 203 ஆக பதிவானது. இதுவரை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,023 ஆகும். நேற்று ஒரேநாளில் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 38. இதேபோல தமிழகம் முழுவதும் 1,611 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். எனவே பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும் குணமாகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக சுகாதாத்துறை தெரிவித்து இருக்கிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 1,379 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் அளவு அதிகரித்து இருப்பதே என சென்னை மாநாகராட்சி தெரிவித்து இருக்கிறது. மே 1 ஆம் தேதியின் நிலவரப்படி, இந்திய அளவில் மற்ற இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 708 ஆக பதிவாகியிருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையின் அளவு 10 லட்சம் பேரில் 1,685 பேராக இருக்கிறது என்றும் அதுவும் சென்னையில் 10 லட்சம் பேரில் 5,225 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
இந்திய அளவில் மற்ற இடங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை அளவைவிட தமிழகத்தில் செய்யப்படும் அளவு இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்றும் அதுவும் சென்னையில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் அளவு 7 மடங்காக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது எனவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. மேலும், “கொரோனா பரிசோதனை அளவை சென்னை மாநகராட்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக சோதனைகள் செய்யும்போது அதிக பாசிட்டிவ்கள் வரும். இதன் மூலம் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப் படும்” எனவும் சென்னை மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி சென்னையில் தினசரி செய்யப்படும் சோதனைகளை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
— Greater Chennai Corporation (@chennaicorp) May 3, 2020
சோதனைகள் அதிகமாக, நோய் உள்ளவர்களை கண்டறிவதுடன், தொற்றை கட்டுப்படுத்த முடியும்.#Covid19Chennai #HereToServe #GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/1QnwMaR80o