தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கை!!! காரணம் இதுதான்...

  • IndiaGlitz, [Monday,May 04 2020]

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. இதற்கு பரிசோதனை செய்யப்படும் அளவு அதிகரித்து இருப்பதே காரணம் என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்து இருக்கிறது.

தமிழத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 266 ஆக உயர்ந்து காணப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 203 ஆக பதிவானது. இதுவரை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,023 ஆகும். நேற்று ஒரேநாளில் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 38. இதேபோல தமிழகம் முழுவதும் 1,611 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். எனவே பாதிப்பு ஒருபக்கம் இருந்தாலும் குணமாகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக சுகாதாத்துறை தெரிவித்து இருக்கிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் 1,379 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் அளவு அதிகரித்து இருப்பதே என சென்னை மாநாகராட்சி தெரிவித்து இருக்கிறது. மே 1 ஆம் தேதியின் நிலவரப்படி, இந்திய அளவில் மற்ற இடங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 708 ஆக பதிவாகியிருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் செய்யப்படும் கொரோனா பரிசோதனையின் அளவு 10 லட்சம் பேரில் 1,685 பேராக இருக்கிறது என்றும் அதுவும் சென்னையில் 10 லட்சம் பேரில் 5,225 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இந்திய அளவில் மற்ற இடங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை அளவைவிட தமிழகத்தில் செய்யப்படும் அளவு இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்றும் அதுவும் சென்னையில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் அளவு 7 மடங்காக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது எனவும் சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. மேலும், “கொரோனா பரிசோதனை அளவை சென்னை மாநகராட்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக சோதனைகள் செய்யும்போது அதிக பாசிட்டிவ்கள் வரும். இதன் மூலம் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப் படும்” எனவும் சென்னை மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

 

More News

1210 பேர்களில் 806 பேர் நான்கு பகுதிகளில் மட்டும்: சென்னையில் கொரோனா நிலவரம்

தமிழகத்திலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு நேற்று மட்டும் கொரோனாவால் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சொந்த நிலத்தை விற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாஷா சகோதரர்கள்!!!

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தாஜம்ல் பாஷா மற்றும் முசம்மில் பாஷா என்ற சகோதரர்கள் இருவரும் தங்களது சொந்த நிலத்தை விற்று

வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணச் செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும்!!! சோனியாகாந்தி அறிவிப்பு!!!

இந்தியாவில் முன்னர் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றோடு முடிவடைந்து மீண்டும் மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு எதிரான 5 Eyes உளவுத்துறையின் 15 பக்க ரிப்போர்ட்!!! என்ன சொல்கிறது???

கொரோனா பரவல் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகளை உலக நாடுகள் முன்வைத்து வருகின்றன

விவாகரத்துக்கு பின் பிரபல நடிகரை திருமணம் செய்யும் சீரியல் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'அவளும் நானும்' என்ற சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். இவர் ஏற்கனவே 'தெய்வம் தந்த வீடு' 'பொன்மகள் வந்தாள்' ஆகிய சீரியலில் நடித்து பிரபலமானவர்