கைகால்கள் எலும்புகூடாகி வயிறு ஊதிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது: ஐ.நா. கவலை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் ஏற்கனவே ஏழைநாடுகளாக இருக்கும் நாடுகள் தற்போது மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்து உள்ளது. பட்டிணி காரணமாக குழந்தைகளின் கை, கால்கள் முற்றிலும் எலும்புகூடாகி வயிறு மட்டும் ஊதிய குழந்தைகளின் எண்ணிக்கை லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா போன்ற நாடுகளில் அதிகரித்து இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. தெற்கு சூடான் பகுதிகளில் பல்வேறு முகாம்களில் வசிக்கும் மக்கள் கொரோனா ஆரம்பித்த பிறகு உணவு இல்லாமல் புற்களையும் தாவரங்களையும் உண்டுவாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஐ.நா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் மோசமான பொருளதார நிலைமையில் ஏற்கனவே ஏழைகளாக இருக்கும் நாடுகள் உலகநாடுகளின் மையத்தில் இருந்து தொடர்பு அறுந்து உதவி கிடைக்காமல் மேலும் இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. பட்டிணிச் சாவினால் மட்டுமே மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் இறந்து போவதாகவும் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. ஐ.நா. வின் 4 முகமைகளில் ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. பட்டிணி, உணவு பஞ்சம் போன்றவை தனிப்பட்ட சிக்கலாக கருதப்பட்டாலும் தற்போது உலக பிரச்சனையாக மாறிவருகிறது எனவும் ஐ.நா. குறிப்பிட்டு இருக்கிறது.
பல ஆப்பிரிக்க நாடுகளில் 2.5 கிலோ எடையை ஒரே மாதத்தில் குழந்தைகள் இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஊட்டச்சத்து இல்லாமல் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 55 லட்சமாக அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. கை, கால்கள் வலுவிழந்து வயிறு மட்டும் பெருத்துக் காணப்படும் குழந்தைகள் தற்போது மருத்துவமனைக்கு வருவது அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் உலகம் முழுவதும் பட்டிணியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 4.7 கோடியில் இருந்தது, மேலும் 67 லட்சம் அதிகரித்து இருப்பதாகவும் ஐ.நா. குறிப்பிடுகிறது.
ஐ.நாவின் உலக உணவுத் திட்டக்குழு கடந்த பிப்ரவரி மாதத்தில் பட்டிணி சாவு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை 30 விழுக்காடாக அதிகரிக்கும் என எச்சரித்து இருந்தது. தற்போது அதேபோல வெனிசுலாவில் மூன்றில் 1 பங்கு மக்களுக்கு சரியான உணவு கிடைக்காமல் பஞ்சத்தில் வாடுவதாகக் கூறப்படுகிறது. அந்நாட்டின் டச்சீராவில் குழந்தைகளுக்கு உணவுக் கிடைக்காமல் வெறுமனே வாழைப் பழச்சாறு மட்டுமே கொடுக்கும் பழக்கமும் அதிகரித்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருப்பதாக ஜான்ஸ் ஹாப்பின்க்ஸ பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக 13 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து இழந்து இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏமன் நாட்டில் பஞ்சம் அதிகரித்து இருப்பதாகவும் சூடானில் நிலைமை இன்னும் மோசமாகி புற்களையும் தாவரங்களையும் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலைமையைச் சமாளிக்க WHO, ஐ.நாவின் உலக உணவுத்திட்டம், உணவு மற்றும் வேளாண் அமைப்பு போன்ற அமைப்புகளுக்கு 2.4 பில்லியன் டாலர் தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout