ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ்!

  • IndiaGlitz, [Tuesday,January 28 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதாக சென்னை ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை பெரியார் ஆதரவாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கும் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மீது கடந்த 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தான் தற்போது வருமான வரித்துறை வாபஸ் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து விசாரணை நடைபெற்றபோது நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, வருமான வரித்துறை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரசிகரின் மொபைல் போனை உடைத்த சல்மான்கான்: வைரல் வீடியோ

பிரபலங்களை அவர்களுடைய அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது என்பது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் சில பிரபலங்கள் கோபப்பட்டு ரசிகர்களின் செல்போன்களை தட்டிவிட்டு உடைத்து விடுவதும் உண்டு 

கொரோனா வைரஸ் இலங்கை வரை பரவியது – சுற்றுலா பெண் பயணி ஒருவர் பாதிப்பு

கொரோனா வைரஸ் பல உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற நிலையில் இலங்கையில் பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

பேட்மிண்டன் வீராங்கனையுடன் விஷ்ணுவிஷால்: வைரலாகும் வீடியோ

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'எப்.ஐ.ஆர்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது: சென்னையில் பரபரப்பு

பட்டாக் கத்தியை வைத்து தங்களுடைய பிறந்த நாள் கேக்கை வெட்டும் ரவுடிகள் கைது செய்யப்படும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பண்டைய தமிழ் மன்னர்களின் படையெடுப்புக்கு கடல் ஆமைகள் வழிகாட்டியாக இருந்தனவா? ஆய்வு தகவல்

பெரிய பெரிய கப்பல்கள் கடல் பரப்பின் மீது ஊஞ்சால் ஆடிச் செல்வதை பார்ப்பதற்கு குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ஆர்வம் காட்டுகிறோம்.