டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்த அடுத்த நாள் சரத்குமார் வீட்டில் ரெய்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் தற்போது உச்சகட்டத்தில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சசிகலா அணியின் வேட்பாளரான டிடிவி தினகரனுக்கு ஆதரவு என பிரபல நடிகரும் அகில இந்திய சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் நேற்று அதிரடியாக அறிவித்தார். இந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியினர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கும் நிலையில் சரத்குமாரின் ஆதரவு தினகரனின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை டிடிவி தினகரனுக்கு ஆதரவு என்று தெரிவித்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க அவர் பணம் பெற்றிருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா என்பது ரெய்டின் முடிவில் தெரியவரும். மேலும் இன்று காலை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments