விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை? பின்னணி என்ன?

  • IndiaGlitz, [Monday,October 23 2017]

நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுவொரு சாதாரண சோதனையா? அல்லது சமீபத்தில் அவருடைய எச்.ராஜா குறித்த விமர்சனங்களுக்கு பதிலடியா? என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

சமீபத்தில் பாஜக கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, 'மெர்சல்' படத்தை இணையத்தில் பார்த்ததாக பேட்டி ஒன்றில் கூறியதற்கு விஷால் காட்டமான ஒரு அறிக்கை வெளியிட்டது மட்டுமின்று எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.